வில்லி பாரதம் இக் கதையினை ‘மாபாரதம்’ என்ற தமிழ்ப் பெயராலேயே அழைக்கிறது. மற்றும் வட மொழிப் பெயர்களைத் தமிழ்ப்படுத்தித் தந்துள்ளது. கர்ணன் என்பதைக் கன்னன் என்று வழங்குகிறது. பீஷ்மன் என்பதை வீடுமன் என்றே வழங்குகிறது. காரணம் வட சொற்களைத் தமிழில் சொல்லும்போது தமிழ் ஒசைபட அமைய வேண்டும் என்பது மொழியியல்பு. எனவே தமிழின்பம் தோன்றச் சந்த ஒசைபட எழுதப்பட்ட இந் நூல் பெரிதும் போற்றப்பட்டு வருகிறது.
வில்லிபாரதம் தெளிவாக ஆற்றொழுக்காகக் கதையை இயக்குகிறது. அதனையே பின்பற்றி இங்கு எழுதப்பட்டதால் கதை தெளிவாகக் கூறமுடிந்தது.
வில்லிபுத்துரார் கன்னன் முடிவும், துரியன் முடிவும் கூறிக் கதையை முடித்துவிடுகிறார். மூல நூல் மற்றும் எட்டுப்பருவங்களில் அவர்கள் பரலோக யாத்திரை மற்றும் ஒவ்வொருவர் மரணம் பற்றியும் கூறுகிறது. இது புராணிகர்களின் போக்கு; அதைத் தவிர்த்துக் காவிய அமைப்புக்கு ஏற்றவகையில் துரியனின் முடிவோடு வில்லி புத்துாரார் கதையை முடித்திருப்பது தனித்தன்மையாகும்; அதே முறையில் இங்கும் கதை முடிக்கப்படுகிறது.
இதனை உரைநடையாக எழுதும் போது ஓர் அரிய சாதனையைச் செய்யவேண்டும் என்று முயன்றேன். பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியாகப் பணியாற்றும் போது கிடைத்த அறிவும் அனுபவமும் பெரிதும் பயன்பட்டன. 1981ல் ஒய்வு பெற்றேன். அண்மையில் இரண்டு ஆண்டுகளாக இவற்றை எழுதும் முயற்சியில் ஈடுபட்டேன். ஏட்டில் படித்தவர்கள் இவை பயன் உடையவை என்று எடுத்துக் காட்டினர்.
Reviews
There are no reviews yet.