I'm புலியூர்க் கேசிகன்
புலியூர்க் கேசிகன் தனித்தமிழ் எழுத்தாளர், உரையாசிரியர், மெய்ப்பு திருத்துநர், பதிப்பாசிரியர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர், சோதிடர், எண்கணித வல்லுநர், செய்யுளாசிரியர், ஆவியியல் ஆய்வாளர், சொற்பொழிவாளர் என்னும் பன்முகம் கொண்டவர்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள புலியூர்க் குறிச்சி என்னும் சிற்றூரில் கந்தசாமி பிள்ளை, மகாலட்சுமி அம்மையார் ஆகியோருக்கு அக்டோபர் 16, 1923 ஆம் நாள் புலியூர்க் கேசிகன் பிறந்தார். இவருக்கு சொக்கலிங்கம் எனப் பெற்றோர் பெயரிட்டனர். அவர் தந்தைக்கு வேளாண்மை முதன்மைத் தொழில் ; மளிகைக்கடை வணிகம் துணைத்தொழில்.
சொக்கலிங்கம் என்னும் இயற்பெயருடைய புலியூர்க் கேசிகன் தனது ஊருக்கு அருகிலுள்ள டோணாவூரில் தொடக்கக் கல்வியையும் உயர்நிலைப்பள்ளி கல்வியையும் பெற்றார். பின்னர் திருநெல்வேலியில் உள்ள மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரியில் இடைநிலை வகுப்புக் கல்வி (Intermediate) பெற்றார். அப்பொழுது நடைபெற்ற இரண்டாவது இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டார்
தமிழ் பேரிலக்கியங்களுக்கும் பெருங் காப்பியங்களுக்கும் எளிமையான நடையில் ஜனரஞ்சகமான முறையில் தெளிவுரைகளை ஏழுதி வெளியீடு செய்து பெரும்பணி ஆற்றிய பேராளர். நவீன தமிழியல் வளர்ச்சிக்கு பல பேராசிரியர்களையும் விஞ்சிய வகையில் புலியூர்க் கேசிகன் பணி செய்துள்ளார். இத்தகைய ஒரு பெரும் பணியாளணை தமிழ் உலகம் பல டாக்டர் பட்டங்கள் வழங்கி அவர் வாழும்போதே வாழ்த்தி இருக்கவேண்டும் என கனடாவின் டொரோண்டோ பல்கலைக் கழகப் பேராசிரியர் அமுது ஜோசப் சந்திரகாந்தன் 2019 இல் குறிப்பிட்டார்.