
I'm Pammal Sambandha Mudaliar
பம்மல் சம்பந்த முதலியார் (Pammal Sambandha Mudaliar, பெப்ரவரி 1, 1873 – செப்டம்பர் 24, 1964) தமிழ் நாடகத் தந்தை என்ற பெயருடன் வழங்கப்பட்டவர். தமிழ் நாடகங்களை முதன்முதலில் உரைநடையில் எழுதியவர். வழக்கறிஞர், நீதியரசர், நாடகாசிரியர், மேடை நாடக நடிகர், எழுத்தாளர், நாடக இயக்குனர் என்ற பல பரிமாணங்களைக் கொண்டவர்.
முதன்முதலில் புஷ்பவல்லி என்ற சமூக நாடகத்தை 1883ல் எழுதி நடித்தார்.
1891ல் சென்னையில் சுகுணவிலாச சபா என்ற அமெச்சூர் நாடகசபையைத் தோற்றுவித்து நாடகங்களை எழுதி தாமே நடித்து பிற அறிஞர்களையும் நடிக்க வைத்த சான்றோர் இவர்
22வது வயதில் அவருடைய முதல் நாடகம் ‘லீலாவதி-சுலோசனா’ என்ற பெயருடன் அரங்கேறியது.
மொத்தம் 80 நாடகங்கள் எழுதினார்.
1959 இல் சங்கீத நாடக அகாதமி விருது
1916 இல் நாடகப் பேராசிரியர் என்ற விருது பெற்றார்.
1959 இல் பத்மபூஷண் என்ற பட்டத்தையும் பெற்றார்.
தன் நாடகங்களில் சிலவற்றில் செய்யுள், கீர்த்தனை முதலியவற்றையும் அறிமுகப்படுத்தினார்.
தமிழ் நாடகம் மக்களின் பார்வையில் உயர்ந்த மதிப்புக்குரியதாகத் திகழ்வதற்கு முதற்காரணமானார்
இந்தியனும்-ஹிட்லரும்
இல்லறமும் துறவறமும்
என் சுயசரிதை
என் தந்தை தாயர்
ஒன்பது குட்டி நாடகங்கள்
ஓர் விருந்து அல்லது சபாபதி நான்காம் பாகம்
கலையோ-காதலோ? அல்லது நட்சத்திரங்களின் காதல்
கள்வர் தலைவன்
காதலர் கண்கள்
காலக் குறிப்புகள்
குறமகள், வைகுண்ட முதலியார் (இரு நாடகங்கள், 1934)
சபாபதி
சபாபதி முதலியாரும்-பேசும் படமும்
நான் குற்றவாளி
சாதாரண உணவுப் பொருள்களின் குணங்கள்
தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை (முதல் பாகம்)
தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை (இரண்டாம் பாகம்)
தீபாவளி வரிசை
தீயின் சிறு திவலை
நாடகத் தமிழ்
நான் கண்ட நாடகக் கலைஞர்கள்
நீண்ட ஆயுளும் தேக ஆரோக்யமும்
பலவகை பூங்கொத்து
மனை ஆட்சி
மனோகரா
மூன்று நகைச்சுவை நாடகங்கள்
யயாதி
வாணீபுர வணிகன்
விடுதிப் புஷ்பங்கள்