ஒட்டுமொத்த இந்திய சமூக மனநிலைக்கு எதிராக வாழ்ந்தும் எழுதியும் வரும்
சாரு நிவேதிதாவிற்கு இந்த சமூகத்தில் இருந்து நிராகரிப்பையும் தடையையையும்
தவிர வேறென்ன கிடைக்கும்? இந்நூல் முழுவதும் பொது சமூகமும், அறிவுலகும் எப்படி
ஒரு கலைஞனை தீண்டாமைக்குள்ளாக்குகிறது என்பதை விளக்குகிறது.
₹180.00Original price was: ₹180.00.₹150.00Current price is: ₹150.00.
கம்பராமாயணத்தைப் படிக்கப் படிக்க அதன் சுவை, நம் நாவில் மட்டுமல்ல, நம் உள்ளத்திலும் உணர்விலும் ஊறி நமக்கு உவகை ஊட்டுகிறது. கதையென்னமோ வால்மீகி முனிவர் தந்த கதைதான். ஆனால் அந்தக் கதையை அங்கங்கே, செதுக்கிச் சீராக்கி, தமிழ்ப் பண்பாட்டிற்கேற்ப, கம்பன் கொண்டு செல்கின்ற திறம், கம்பன் கவி நலம், கம்பன் பாத்திரப் படைப்புகள் இவையெல்லாம் நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகின்றன. அவன் பாடிச் சென்றுள்ள பன்னீராயிரம் பாடல்களையும் நாம் படித்து அனுபவிக்க அவகாசம் இருக்கிறதோ இல்லையோ, அப்படியெல்லாம் சிரமப்பட வேண்டாம் என்றே பி.ஜி. ஆச்சார்யா, முதுபெரும் புலவர் வெள்ளகால் சுப்பிரமணிய முதலியார், ரசிகமணி டிகேசி போன்றவர்கள், அந்தக் கம்பராமாயணத்திலிருந்து தெள்ளி எடுத்து, அவற்றைக் கம்ப சித்திரமாகவும், கம்பராமாயண சாரமாகவும், கம்பர் தரும் காட்சியாகவும் நமக்குத் தந்திருக்கிறார்கள்.
பம்மல் சம்பந்த முதலியார் தமிழ் நாடக உலகில் மிக முக்கியமான ஒரு ஆளுமை. அவருக்குத் “தமிழ் நாடகத் தந்தை” என்ற பெருமை வழங்கப்பட்டிருப்பது அவருடைய பெரும் பங்களிப்பை எடுத்துக் காட்டுகிறது. தமிழ் நாடகங்களை முதன்முதலாக உரைநடையில் எழுதியவர் அவர்.வழக்கறிஞர், நீதியரசர், நாடகாசிரியர், மேடை நாடக நடிகர், எழுத்தாளர், நாடக இயக்குனர் ஆகிய பல்வேறு பரிமாணங்களைக் கொண்டிருந்தார். அவரது படைப்புகள் மற்றும் செயல்பாடுகள் தமிழ் இலக்கியத்தையும், மேடை நாடகக் கலையையும் மிகவும் செழுமையாக்கியவை.இந்த நூலில், பம்மல் சம்பந்த முதலியார் தனது அனுபவங்களின் அடிப்படையில் ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுள் குறித்து முக்கியமான கருத்துகளை பகிர்ந்துள்ளார். நம் காலத்தில் புதிய உணவு பழக்கங்களும், வேறுபட்ட பணிச் சூழல்களும் மேலோங்கியுள்ள நிலையில், 84வது வயதில் அவர் வழங்கிய ஆரோக்கியக் கருத்துகள் இன்னும் பிரசక్తமானவை.அவரது வார்த்தைகள், நம் வாழ்க்கையை சீர்செய்து ஆரோக்கியமான வழிமுறைகளைப் பின்பற்ற உதவும் வழிகாட்டியாக இருக்கும்.
₹350.00Original price was: ₹350.00.₹300.00Current price is: ₹300.00.
பெரிய விஷயங்களை எளிய முறையில் நகைச்சுவையாகச் சொல்லும் திறன் படைத்தவர்.சிறைச்சாலையில் கூட இவர் இருக்கும் இடம் கலகலப்பாக இருக்கும்.சுதந்திரப் போராட்ட காலத்தில் இவர் மிகவும் ஆவேசமாகப் பேசுவார்; செயல்படுவார்.
தமிழ்ப்பண்ணை என்ற புத்தகப் பிரசுரம் மூலம் நல்ல நூல்களை வெளியிட்டிருக்கிறார்.மிக அழகாக அதிகச் செலவில் – லாபம் கருதாமல் வெளியிட்டு அதற்கு ஒரு மகத்துவம் ஏற்படுத்தியிருக்கிறார். எனது பிரியமுள்ள சின்ன அண்ணாமலை அவர்களுக்கு எனது ஆசி
We use cookies to enhance your browsing experience, serve personalized ads, and analyze our traffic. By clicking Accept All Cookies, you consent to our use of cookies. You can manage your cookie preferences by clicking Cookie Settings.