‘அபிதா’ ஒரு காதல் கதைதான். ஆனால் அபிதாவின் மூலம் லா.ச.ரா-வால் எவ்வளவு ஆழமாகப் போக முடியும் என்பதைப் பார்க்கலாம். காமத்தின் அணுகுமுறையில், மௌனியும் லா.ச.ரா.வும் ஒன்றே. பெண்ணின் கன்னித் தூய்மை, ஸ்பரிசம் அடையாத காதல் — இதுவே அவர்களின் மையம்.
ஒவ்வொரு வாக்கியமும் ஒரு புதிர் வட்டப் பாதையைப் (labyrinth) போல் உணர வைத்தது; அதனுள் பயணிக்க வேண்டிய நேர்த்தி வாசகனுக்கு தேவைப்படுகிறது. அபிதாயை வாசிக்கும்போது, இதை மனிதர் ஒருவர் எழுதினாரா என்ற ஆச்சரியம் அடிக்கடி வந்தது. ஒரு வகையில், அபிதா உலக அளவில் புகழ்பெற்ற லொலிதா, Sense and Lovers, Ma Mère போன்ற எல்லைகளை மீறும் (transgressive) நாவல்களை விடச் சிறந்த படைப்பு என நான் மதிப்பிடுவேன்.
https://charuonline.com/blog/
Reviews
There are no reviews yet.