மா பாரதம் – Ma Bharatham

250.00

வடமொழியில் எழுதிய இராம காதையையும் மாபாரதத்தையும் தமிழ்ப்படுத்திய கம்பரும் வில்லிபுத்துராரும் அவற்றை வெறும் மொழிபெயர்ப்பு செய்யவில்லை. தமிழ் இன்பம் தோன்றும்படி அவற்றைத் தம் கவிதையாற்றலால் சுவைபடத் தந்துள்ளனர். அதனால் இப் படைப்புகள் மூல நூலில் உள்ள கதையும், தமிழ்க் கவிதையும் கலந்து மாபெரும் காப்பியங்களாகத் திகழ்கின்றன. இவையே இன்று மேடைகளிலும் அரங்குகளிலும் செவி நுகர் கனிகள் என்று பேசப்படுகின்றன.

வில்லி பாரதமும் பட்டி தொட்டிகளில் பாரதப் பிரசங்கங்களாகப் பேசப்பட்டது. இன்று உரை நூல்கள் வந்துவிடுவதால் இருந்த இடத்தில் இருந்து இந்நூல்களின் அருமை பெருமைகளை உணர வாய்ப்பு ஏற்பட்டு விட்டதால் பாரதப் பிரசங்கங்கள் குறைந்து விட்டன.

வில்லி பாரதம் இக் கதையினை ‘மாபாரதம்’ என்ற தமிழ்ப் பெயராலேயே அழைக்கிறது. மற்றும் வட மொழிப் பெயர்களைத் தமிழ்ப்படுத்தித் தந்துள்ளது. கர்ணன் என்பதைக் கன்னன் என்று வழங்குகிறது. பீஷ்மன் என்பதை வீடுமன் என்றே வழங்குகிறது. காரணம் வட சொற்களைத் தமிழில் சொல்லும்போது தமிழ் ஒசைபட அமைய வேண்டும் என்பது மொழியியல்பு. எனவே தமிழின்பம் தோன்றச் சந்த ஒசைபட எழுதப்பட்ட இந் நூல் பெரிதும் போற்றப்பட்டு வருகிறது.

10 in stock

ISBN: 9788198071675 Category: Tag:

About the author

டாக்டர் ரா சீனிவாசன்
ரா. சீனிவாசன் (ராமானுஜலு சீனிவாசன்: 1923-2001) தமிழ்ப் பேராசிரியர். ‘சங்க இலக்கியத்தில் உவமைகள்' என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, குறள், மணிமேகலை போன்ற இலக்கியங்களைப் பற்றி ஆராய்ந்து…
See More

வில்லி பாரதம் இக் கதையினை ‘மாபாரதம்’ என்ற தமிழ்ப் பெயராலேயே அழைக்கிறது. மற்றும் வட மொழிப் பெயர்களைத் தமிழ்ப்படுத்தித் தந்துள்ளது. கர்ணன் என்பதைக் கன்னன் என்று வழங்குகிறது. பீஷ்மன் என்பதை வீடுமன் என்றே வழங்குகிறது. காரணம் வட சொற்களைத் தமிழில் சொல்லும்போது தமிழ் ஒசைபட அமைய வேண்டும் என்பது மொழியியல்பு. எனவே தமிழின்பம் தோன்றச் சந்த ஒசைபட எழுதப்பட்ட இந் நூல் பெரிதும் போற்றப்பட்டு வருகிறது.

வில்லிபாரதம் தெளிவாக ஆற்றொழுக்காகக் கதையை இயக்குகிறது. அதனையே பின்பற்றி இங்கு எழுதப்பட்டதால் கதை தெளிவாகக் கூறமுடிந்தது.

வில்லிபுத்துரார் கன்னன் முடிவும், துரியன் முடிவும் கூறிக் கதையை முடித்துவிடுகிறார். மூல நூல் மற்றும் எட்டுப்பருவங்களில் அவர்கள் பரலோக யாத்திரை மற்றும் ஒவ்வொருவர் மரணம் பற்றியும் கூறுகிறது. இது புராணிகர்களின் போக்கு; அதைத் தவிர்த்துக் காவிய அமைப்புக்கு ஏற்றவகையில் துரியனின் முடிவோடு வில்லி புத்துாரார் கதையை முடித்திருப்பது தனித்தன்மையாகும்; அதே முறையில் இங்கும் கதை முடிக்கப்படுகிறது.

இதனை உரைநடையாக எழுதும் போது ஓர் அரிய சாதனையைச் செய்யவேண்டும் என்று முயன்றேன். பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியாகப் பணியாற்றும் போது கிடைத்த அறிவும் அனுபவமும் பெரிதும் பயன்பட்டன. 1981ல் ஒய்வு பெற்றேன். அண்மையில் இரண்டு ஆண்டுகளாக இவற்றை எழுதும் முயற்சியில் ஈடுபட்டேன். ஏட்டில் படித்தவர்கள் இவை பயன் உடையவை என்று எடுத்துக் காட்டினர்.

– ரா. சீனிவாசன்

Weight 0.200 kg
Dimensions 21 × 14 × 2 cm

Reviews

There are no reviews yet.