புருஷன் -(Hard cover) Purushan Novel by Araathu (Tamil) Hardcover

1,000.00

புருஷன்

A Raw and masculine perverted novel.

இப்படி ஒரு நாவலை நான் உலக இலக்கியத்திலேயே வாசித்ததில்லை. இந்திய இலக்கியத்திலும்தான். காரணம், இதுவரை இப்படிப்பட்ட வாழ்க்கையை எந்த எழுத்தாளனுக்கும் காணக் கிடைத்திருக்காது. தஸ்தயேவ்ஸ்கி இப்படி ஒரு வாழ்வைக் கண்டிருக்க மாட்டார். இது பின்நவீனத்துவக் காலகட்டத்துக்கே உரியது. ஆனாலும் இந்தக் காலகட்டத்தில் வாழும் ஒரு மேற்கத்திய எழுத்தாளன் கூட இதைப் பதிவு செய்யவில்லை.
எப்படி ஸீரோ டிகிரி போன்ற ஒரு நாவல் உலக மொழிகளில் எழுதப்படவில்லையோ, அதேபோல் புருஷன் போன்ற ஒரு நாவலும் உலகின் எந்த மொழியிலும் எழுதப்படவில்லை.

நோபல் பரிசு பெற்ற Elfriede Gelinek எல்லாம் அராத்துவிடம் பிச்சை வாங்க வேண்டும். என்னுடைய வாசிப்பு அனுபவத்தில் உலகின் எந்த மொழியிலும் இப்படி ஒரு நாவலைப் படித்ததே இல்லை. ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால், யாருமே படிக்காத இலக்கியவாதிகளையெல்லாம் நான் படித்திருக்கிறேன்.

– சாரு நிவேதிதா

ISBN: 9788196029586 Categories: , , Tags: , , ,

About the author

அராத்து araathu
Araathu is a prominent and widely read author among the current writers in Tamil. He steers clear of the beaten track and almost all of…
See More

புருஷன் நாவல் 2024 டிசம்பரில் தான் வெளியாகும். ஒரு வருடம் முன்பதிவு நடந்துகொண்டே இருக்கும். முன் பதிவில் 1000 எண்ணிக்கையை எட்டுவது இலக்கு.

முன்பதிவில் வாங்குபவர்களுக்கு ஸ்பெஷல் எடிஷன் காப்பிகள். விலை ரூ 1000 /-
இது அல்லாமல் 100 NFT காப்பிகளும் உண்டு. NFT இல் வாங்குபவர்களுக்கு பிரிண்ட் புத்தகமும் வந்து சேரும். இந்த முறை NFT கொஞ்சம் சல்லிசான விலையில் இருக்கும்.

அடிக்கடி நாவலின் முன்பதிவு விலை ஏறிக்கொண்டே இருக்கும் 🙂

வேறு என்ன புதுமை ?

புருஷன் நாவல் எழுதிக்கொண்டிருக்கையிலேயே முன்பதிவு செய்தவர்களுடன் இரண்டு மூன்று சந்திப்புகள் நடக்கும். குத்து மதிப்பாக நாவல் போகும் போக்கை விவாதிப்போம். ஒரு சில அத்தியாயங்களை நாவல் அண்டர் கஸ்ட்ரகஷனில் இருக்கையிலேயே வாசிக்கலாம்.

கலந்து கொள்பவர்கள் தங்கள் கருத்துக்களையும் கதைகளையும் சொல்லலாம். தேவையானதை உள்வாங்கிக்கொண்டு நாவல் தொடரும். இரு பாலாருக்கும் கதைகள் சொல்ல வாய்ப்புண்டு

நாவல் வெளியீட்டு விழா பிரம்மாண்டமான பிரைவேட் ஈவன்ட். ஒரு சில திட்டங்கள் மனதில் உள்ளன. ஒவ்வொன்றாக தெரிவிக்கிறேன்.

பொண்டாட்டி நாவல் படிக்காமலும் புருஷனை வாசிக்கலாம். பொண்டாட்டி நாவல் ஒன்சைடாக பெண்களுக்கு ஆதரவாக பெண்கள் தரப்பு நியாயத்தை மட்டும் பேசும் பிரதியாக இருந்தது என்ற குற்றச்சாட்டு சிலரிடம் இருந்து வந்தன. அப்போது எஞ்சாய் செய்த பெண்கள் ஆண்கள் குரலாக வர இருக்கும் புருஷன் நாவலை படித்து விட்டு குர்யோ முர்யோ எனக் கத்தக்கூடாது.

இப்போதே சொல்லி விடுகிறேன்…..

புருஷன் – A raw and masculine perverted novel

Weight800 kg
Dimensions15 × 22 × 5 cm
header

Purushan Novel, Araath (Hard Cover), புருஷன் – நாவல் – அராத்து (கெட்டி அட்டை)

Reviews

There are no reviews yet.

You may also like…