About the author
அராத்து araathu
Araathu is a prominent and widely read author among the current writers in Tamil. He steers clear of the beaten track and almost all of…
See More₹200.00
சாரு நிவேதிதா சொல்வது போல எதார்த்தவாத கதைகளின் காலம் முடிந்துவிட்டதென்று சொல்கிற எழுத்தாளர்களில் அராத்துவும் ஒருவர். தனது எழுத்தில் உருவாகும் எல்லா கதைகளிலும் ஒரு புது பாணியை கையாள்கிறார். இந்த தொகுதியில் வரும் இரண்டு கதைகளும் அதற்கு விதிவிலக்கல்ல. கதை மட்டுமன்றி நூல் வடிவமைப்பும் அவ்வாறே இருக்கிறது. நூலின் முன் அட்டை பின் அட்டை என்கிற விஷயமே கிடையாது. ஒரு அட்டையில் புஸ்ஸி இன்னொரு அட்டையில் Fool vs Intellectual. ஒரு அட்டை பக்கத்தில் ஒரு கதை ஆரம்பிக்க இன்னொரு அட்டை பக்கத்தில் இன்னொரு கதை ஆரம்பிக்கிறது.
தமிழில் இன்றும் யதார்த்தவாத எழுத்துக்களும் , ரொமாண்டிசைஸ் செய்யப்படும் கதைகளே கோலோச்சுகின்றன. இன்னும் கேட்டால் உலகம் முழுக்கவும் இதே போக்குகளே தென்படுகின்றன.
புது கண்டெண்ட் , புது நெரேஷன் , பரிசோதனை முயற்சி இதற்கெல்லாம் வெளியே இல்லை.
மீண்டும் மீண்டும் அன்பு , காதல் , பாசம் , கருணை , நீதி , ஆன்மீக தரிசனம் , ஏழ்மை , நோய்மை இதைப்பற்றிய நாவல்களே தொடர்ந்து வருகின்றன.
உலகமயமாக்கலுக்குப் பிறகு இலக்கியம் பன்னாட்டு நிறுவனங்களின் கைகளில் சென்றடைந்ததின் வெளிப்பாடு இது.
அனைத்து மக்களையும் ஸ்டேண்டடைஸ் ஆக்குவதன் (ஒரே மாதிரி பன்றிக்குட்டிகள்) ஒரு பகுதியாக எழுத்தாளர்களையும் ஒரு குறிப்பிட்ட நான்கைந்து டெம்ப்ளேட்டுக்களில் மட்டுமே எழுதும்படி கொண்டு வந்து நிறுத்தியுள்ளார்கள்.
வாசகர்களுக்கும் அந்த டெம்ப்ளேட்டே பழகி விட்டது. அந்த டெம்ப்ளேட்டில் இருத்நால்தான் எந்த நாவலும் பெஸ்ட் செல்லர் ஆக முடியும். உலக அளவிலான போக்கைச் சொல்லும் அதே வேளையில் , இங்கே தமிழ்நாட்டில் இலக்கியமும் , புத்தக விற்பனையும் அதள பாதாளத்தில் கிடக்கும் சூழலில் இங்கேயும் எந்த புது முயற்சியும் இல்லை , அதே பழைய கஞ்சிதான்.
உலக அளவிலாவது விற்பனைக்காகச் செய்கிறார்கள். இங்கே செய்வதற்கு வழி தெரியாமல் கிரியேட்டிவிட்டி , முனைப்பு இல்லாமல் , செக்கு மாட்டை மட்டும் மாற்றி விட்டு அதே செக்கை சுத்திக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்த நாவல் புஸ்ஸி சிறந்த நாவல் என்றெல்லாம் சொல்ல வேண்டியதில்லை. மட்டமான நாவல் என்று கூடச் சொல்ல உரினையுள்ளது. ஆனால் மக்கிப்போன , பழைய நெடி வீசும் மற்றுமொரு +1 நாவல் அல்ல.
இந்த நவலில் புஸ்ஸி + Fool Vs Intelectual என இரண்டு நெடுங்க்தைகள் உள்ளன.
Reviews
There are no reviews yet.