I'm லா சா ராமாமிர்தம்
லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் (30 அக்டோபர் 1916 – 30 அக்டோபர் 2007) தமிழ் எழுத்தாளர். இவருடைய முன்னோர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த லால்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தன்னுடைய பெயரை லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் என்பதன் சுருக்கமாக ல.ச.ரா என்ற பெயரில் எழுதிவந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி காலத்திலிருந்தே எழுதி வந்தவர்.[1] இவர், தனது 92வது பிறந்த நாளில் இறந்தார்
1916ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம், பெங்களூரில் பிறந்தவர்.[3] இவருடைய இளமை பருவம் முழுவதும் காஞ்சிபுரம் அருகே இயற்கை சூழல் மிகுந்த அய்யம்பேட்டை என்னும் கிராமத்தில் வளர்ந்தார். இவருடைய தந்தை சப்தரிஷி, தாய் ஸ்ரீமதி. இவருடைய மனைவி ஹைமாவதி. இவருக்கு 4 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இவருடைய தந்தை சப்தரிஷி, ல.ச.ரா -வின் மீது தனிக்கவனம் செலுத்தி அவரே ஆசிரியராக இருந்து வீட்டிலேயே தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பாடங்கள் கற்பித்து வந்தார். தந்தையார் மூலம் தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியங்களில் இவருக்கு 12 வயதுக்குள் நல்ல ஆர்வமும், புலமையும் ஏற்பட்டது. அரசுப்பள்ளியில் 8-ஆம் வகுப்பு முதல் 10 -ஆம் வகுப்பு வரை படித்து பள்ளி இறுதி தேர்வில் தேறினார்.
புதினம்
புத்ர (1965)
அபிதா (1970)
கல்சிரிக்கிறது
பிராயச்சித்தம்
கழுகு
கேரளத்தில் எங்கோ
சிறுகதைகள்
இதழ்கள் (1959)
ஜனனி (1957)
பச்சைக் கனவு (1961) (பச்சைக்கனவு, அபூர்வராகம், பேசும்விரல், அம்முலு, தாஷாயணி, பாற்கடல், மேகரேகை, மண், சுமங்கல்யன், சாட்சி, சாவித்ரி)
கங்கா (1962)
அஞ்சலி (1963)
அலைகள் (1964)
தயா (1966)
மீனோட்டம்
உத்தராயணம்
நேசம்
புற்று
துளசி
என் பிரியமுள்ள சினேகிதனுக்கு
அவள்
த்வனி
விளிம்பில்
அலைகள்
நான்
சௌந்தர்ய