- (0 reviews)
புதுமைப்பித்தன் சிறுகதைகள்,...
Original price was: ₹300.00.₹100.00Current price is: ₹100.00.‘புதுமைப்பித்தன்’ அவர்களை, தமிழ்நாடு நன்கறியும். அவருடைய எழுத்துக்களைப் பற்றிக் கருத்து வேற்றுமைகள் பல இருக்கலாம். ஆனால், அவைகளை அலட்சியப்படுத்தித் தள்ளிவிடவோ, பொழுதுபோக்கு என்று படித்துவிட்டுத் தூரப்போட்டுவிடவோ முடியாது. அவருடைய கதை எழுதும் பாணியே அலாதி. வட இந்தியாவின் பிரபல நாவலாசிரியர் பிரேம்சந்தைப் போலவே, சமூகத்தின் குறைகளைக் குத்திக் காட்டுவதில் புதுமைப்பித்தனின் எழுத்துக்கள் சக்தியும் கூர்மையும் பெற்று விளங்குகின்றன. இதில் அடங்கியுள்ள கதைகள் சமுதாயத்தின் பல பகுதிகளை பார்ப்பதற்கு நமக்குத் துணை செய்கின்றன.
- (0 reviews)
புதுமைப்பித்தன் சிறுகதைகள்,...
Original price was: ₹300.00.₹100.00Current price is: ₹100.00.இன்று புதுமைப்பித்தனின் பெயர் தமிழ்ச் சூழலில் நிலைத்துவிட்டது. இந்த நூற்றாண்டில் மேலும் அவர் கவனம் பெற ஏற்ற சூழல் உருவாகி வருகிறது என்று கருதலாம். அவரை ஆர்வத்துடன் கற்கும் வாசகர்கள் அதிக அளவில் நாளை தோன்றவும் செய்வார்கள். புதுமைப்பித்தன் படைத்துள்ள உலகத்திலிருந்து வாசகர்கள் பெறவிருக்கும் அதிர்ச்சியும் விழிப்பு நிலையும், ஊடகங்களால் இன்றுவரையிலும் ஊதி வளர்க்கப்பட்டுள்ள எண்ணற்ற எழுத்துப் பிம்பங்களை உதிரச் செய்துவிடக் கூடும். சிந்தனை சார்ந்த தளம் விரிகிறபோது அசட்டுக் கற்பனைகள் சார்ந்த தளம் சுருங்கத்தான் செய்யும். வாழ்க்கையைப் பற்றிய கவலைகள் கூர்மை கொள்ளும்போது வாழ்க்கைத் தளம் அற்று அந்தரத்தில் தொங்கும் ஜோடனைகள் வெளிறிப் போகும். விமர்சனத்தைவிட ஆழ்ந்த விமர்சனத்தை உருவாக்குபவை படைப்புகள்தாம். புதுமைப்பித்தனோ சமூக விமர்சனத்தையே தன் உயிராகக் கொண்ட படைப்பாளி.
தமிழ் வாழ்வின் வெவ்வேறு கோலங்களைக் காட்டி அதன் முழுப் பரப்பும் தன் அனுபவத்திற்குள் வந்துவிட்டதான பிடிப்பை வாசகனுக்கு அளித்திருப்பது புதுமைப்பித்தனின் மிகப் பெரிய சாதனை.
- சுந்தர ராமசாமி
புதுமைப்பித்தனின் 97 சிறுகதைகளும் மூன்று தொகுதிகளாக அச்சிடப்பட்டுள்ளன. இது தொகுதி மூன்று, 73-97 வரையிலான சிறுகதைகளை உள்ளடக்கியது.
- (0 reviews)
சொன்னால் நம்பமாட்டீர்கள்,...
Original price was: ₹350.00.₹300.00Current price is: ₹300.00.பெரிய விஷயங்களை எளிய முறையில் நகைச்சுவையாகச் சொல்லும் திறன் படைத்தவர். சிறைச்சாலையில் கூட இவர் இருக்கும் இடம் கலகலப்பாக இருக்கும். சுதந்திரப் போராட்ட காலத்தில் இவர் மிகவும் ஆவேசமாகப் பேசுவார்; செயல்படுவார்.
தமிழ்ப்பண்ணை என்ற புத்தகப் பிரசுரம் மூலம் நல்ல நூல்களை வெளியிட்டிருக்கிறார். மிக அழகாக அதிகச் செலவில் – லாபம் கருதாமல் வெளியிட்டு அதற்கு ஒரு மகத்துவம் ஏற்படுத்தியிருக்கிறார். எனது பிரியமுள்ள சின்ன அண்ணாமலை அவர்களுக்கு எனது ஆசி
– சக்கரவர்த்தி இராசகோபாலாச்சாரி
- (0 reviews)
நவகாளி யாத்திரை...
₹75.00வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒரு சந்தர்ப்பம் – அருமையான சந்தர்ப்பம் – ஏற்படுகிறது. அந்தச் சந்தர்ப்பத்தின் அருமையைத் தெரிந்துகொண்டு பயன்படுத்திக் கொள்ள ஆற்றல் வேண்டும்; அதோடு அதிர்ஷ்டமும் வேண்டும். சென்ற 1947-ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் ‘சாவி’யின் வாழ்க்கையில் அத்தகைய அருமையான சந்தர்ப்பம் நேர்ந்தது. அதைப் பயன்படுத்திக்கொள்ளும் ஆற்றலும், அதிர்ஷ்டமும் அவருக்கு இருந்தன.
“நவகாளிக்குப் போகிறீர்களா?” என்று கேட்டதும் ஒரு கண்மும் யோசியாது, “போகிறேன்” என்று உடனே ஒப்புக் கொண்டார்.
காரியம் யோசிக்க வேண்டிய காரியம்தான். நவகாளி என்று சொன்னாலே அப்போதெல்லாம் உடம்பு நடுங்கிற்று. உள்ளம் பதைத்தது. மனிதர்கள் செய்வார்கள் என்று எண்ண முடியாத பயங்கரமான பைசாசச் செயல்கள் அந்தப் பிரதேசத்தில் நடந்திருந்தன. பத்திரிகைகளில் படிக்கும்போதே குலைநடுக்கம் உண்டாயிற்று.
அத்தகைய பயங்கரப் பிரதேசத்துக்கு மகாத்மா காந்தி பிரயாணப்பட்டார்.
“கிராமம் கிராமமாகக் கால்நடையாக நடந்து செல்வேன். அன்பு மதத்தையும், அஹிம்சா தர்மத்தையும் பரப்புவேன்!” என்று சொன்னார்.
பலர் சந்தேகப்பட்டார்கள். வேண்டாம் என்று தடுத்தார்கள். ‘காரியம் கைகூடாது; வீண் அபாயத்துக்கு உட்படுகிறீர்கள்’ என்று சொன்னார்கள். வழக்கம் போல மகாத்மா இந்தத் துக்கிரி வார்த்தைகளுக்கெல்லாம் செவி கொடுக்கவில்லை. தமது அந்தராத்மாவின் குரலுக்கே செவி சாய்த்தார். நவகாளிக்குப் புறப்பட்டுச் சென்றார்.
“என்னுடைய இலட்சியங்களுக்குக் கீழ்வங்காளத்தில் கடும் சோதனை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு முன் இத்தகைய ஒரு பெரும் சோதனையில் நான் ஈடுபட்டதில்லை. இந்தப் பரீட்சையில் நான் தேறாமல் போனால் அது அஹிம்சா தர்மத்துக்குத் தோல்வியாகாது. அஹிம்சைக் கொள்கையை ஸ்தாபிக்க நான் கடைப் பிடித்த முறைதான் தோல்வி அடைந்ததாகும். இப்போது நான் தோல்வி அடைந்தாலும் பிற்காலத்தில் தோன்றப்போகும் உத்தமர்களும், மகான்களும் இந்த முயற்சியில் வெற்றி பெறுவார்கள் என்பது நிச்சயம்” என்று மகாத்மா காந்தி நவகாளி யாத்திரையின்போது கூறினார்.
- (0 reviews)
மார்க்சீய அழகியல்...
Original price was: ₹75.00.₹50.00Current price is: ₹50.00.மார்க்சீய அழகியல் கொள்கை, எல்லாவிதக் கலைப் படைப்புக்களையும், அனைத்துக் காலக் கலை வரலாற்றையும் விளக்குவதற்கு, மார்க்சீய அறிதல் தோற்றக் கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.
‘அறிதல் தோற்றம்’ என்னும் கொள்கை, கருத்து முதல்வாத அறிதல் தோற்றக் கொள்கையை எதிர்த்த போராட்டத்தில் உருவானது. இதனை மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின் ஆகிய மார்க்சீயத் தத்துவத்தின் முதலாசிரியர்கள் உருவாக்கினார்கள்.
கருத்துப் போராட்டங்களில் உருவான மார்க்சீய அறிதல் தோற்றத்தின் முக்கியமான அடிப்படைகள் பின்வருமாறு: இவை பிரதிபலிப்புக் கொள்கையென மார்க்சீயவாதிகளால் அழைக்கப்படும்.
- பொருள்கள் நமது உணர்விற்கு வெளியே சுதந்திரமாக நிலைபேறு கொண்டுள்ளன.
- ஒரு பொருளின் சாரம் என்பதே (thing in itself) பொருளின் தன்மை அல்லது பொருளின் நிகழ்வுத் தொடர்தான்.
பொருளைப் பற்றி எந்த அளவு தெரிந்து கொண்டிருக்கிறோம், எந்த அளவு தெரிந்துகொள்ளவில்லை என்ற அளவில் தான் வேறுபாடு உள்ளது. முற்காலத்தில் அணு என்ற பொருளைப் பற்றித் தெரிந்ததைப் (லுக்ரீஷியஸ் கானடர்) பண்டையத் தத்துவ ஞானிகள் வெளிப்படுத்தினார்கள். பிற்காலத்தில் டால்டன் அவர் காலம் வரை அணுவைப் பற்றித் தெரிந்ததைத் தொகுத்துக் கூறினார். தற்காலத்தில் அதே பொருளைப் பற்றி உலக விஞ்ஞானிகள் ஆராய்ந்து அணு பற்றிய கருத்தை மாற்றியுள்ளார்கள். அறிந்த அளவில்தான் மூன்று கட்டங்களிலும் வேறுபாடுள்ளதே தவிர அணு, இயக்கவியல் முரண்பாடுகளோடு இருப்புக் கொண்டுள்ளது.
- எந்த அறிவியல் துறையிலும் நாம் சிந்திப்பது போலவே, அறிவுத் தோற்றவியல் துறையிலும் நாம் இயக்கவியல் முறையில் சிந்திக்கவேண்டும். மாற்ற முடியாத சட்டுத் தந்த தோசையைப் போல் முடிவு பெற்ற ஒன்றாக அறிவைக் கருதலாகாது.
- (0 reviews)
அகநானூறு –...
Original price was: ₹280.00.₹250.00Current price is: ₹250.00.அகநானூறு பாடல்கள் மூன்று தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுப் பதிப்பிடப்பட்டுள்ளன. முதல் 120 பாடல்களைக் களிற்றியானை நிரை, 121 முதல் 300 வரையிலான 180 பாடல்களை மணிமிடை பவளம், 301 முதல் 400 வரையிலான 100 பாடல்களை நித்திலக் கோவை எனப் பெயரிட்டுள்ளனர்.
ஆணும் பெண்ணும் காதலால் இணைந்து, தமக்குள் இன்பம் அனுபவித்து வாழ்வது அக வாழ்வாகும். இவ்வாறு, அவர்கள் தமது உள்ளத்திற்குள் நுகரும் உணர்வுகளை சித்தரிப்பவை அகநானூறு பாடல்கள். இந்தப் பாடல்கள் யானைக்களிறு போல் பெருமிதமுடன் நிறைந்தவை. யானைகளின் அணிவகுப்பை ஒத்திருக்கும் வகையில், ஓரினப் பாடல்களின் அணிவகுப்பாகே இவை அமைந்துள்ளன.
இவற்றை எளிதாகப் புரிந்து கொள்ளப் புலியூர்க் கேசிகன் அவர்களின் தெளிவுரை சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.