• 10% OffHot
    (0 reviews)

    Purushan by...

    Original price was: ₹600.00.Current price is: ₹540.00.

    இப்படி ஒரு நாவலை நான் உலக இலக்கியத்திலேயே வாசித்ததில்லை. இந்திய இலக்கியத்திலும்தான். காரணம், இதுவரை இப்படிப்பட்ட வாழ்க்கையை எந்த எழுத்தாளனுக்கும் காணக் கிடைத்திருக்காது. தஸ்தயேவ்ஸ்கி இப்படி ஒரு வாழ்வைக் கண்டிருக்க மாட்டார். இது பின்நவீனத்துவக் காலகட்டத்துக்கே உரியது. ஆனாலும் இந்தக் காலகட்டத்தில் வாழும் ஒரு மேற்கத்திய எழுத்தாளன் கூட இதைப் பதிவு செய்யவில்லை.
    எப்படி ஸீரோ டிகிரி போன்ற ஒரு நாவல் உலக மொழிகளில் எழுதப்படவில்லையோ, அதேபோல் புருஷன் போன்ற ஒரு நாவலும் உலகின் எந்த மொழியிலும் எழுதப்படவில்லை.

    நோபல் பரிசு பெற்ற Elfriede Gelinek எல்லாம் அராத்துவிடம் பிச்சை வாங்க வேண்டும். என்னுடைய வாசிப்பு அனுபவத்தில் உலகின் எந்த மொழியிலும் இப்படி ஒரு நாவலைப் படித்ததே இல்லை. ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால், யாருமே படிக்காத இலக்கியவாதிகளையெல்லாம் நான் படித்திருக்கிறேன்.

    – சாரு நிவேதிதா

  • HotLimited
    (0 reviews)

    இந்தியத் தத்துவ...

    400.00

    “தேசிய அளவிலான ஒரு விழிப்புணர்விற்கும், உலகளவிலான முற்போக்கு சக்திகளின் போராட்டங்கள்
    மற்றும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான தன் மக்களின் போராட்டங்களுக்கும் மத்தியில்
    வாழ்ந்து, இந்தியத் தத்துவப் போக்குகள் குறித்த தனது விலைமதிப்பற்ற பங்களிப்புகளைத் தந்து சென்றவர்தான் தேவி பிரசாத் சட்டர்ஜி”.
    – வால்டர் ரூபன்

    “இந்தியாவில் தேவி பிரஸாத் சட்டோபாத்யாயாவைப் படிக்காத எவரும் தன்னை எழுத்தாளர் என்று சொல்லிக் கொள்ள முடியாது”.
    – சாரு நிவேதிதா

  • Hot
    (0 reviews)

    புருஷன் -(Hard...

    1,000.00

    புருஷன்

    A Raw and masculine perverted novel.

    இப்படி ஒரு நாவலை நான் உலக இலக்கியத்திலேயே வாசித்ததில்லை. இந்திய இலக்கியத்திலும்தான். காரணம், இதுவரை இப்படிப்பட்ட வாழ்க்கையை எந்த எழுத்தாளனுக்கும் காணக் கிடைத்திருக்காது. தஸ்தயேவ்ஸ்கி இப்படி ஒரு வாழ்வைக் கண்டிருக்க மாட்டார். இது பின்நவீனத்துவக் காலகட்டத்துக்கே உரியது. ஆனாலும் இந்தக் காலகட்டத்தில் வாழும் ஒரு மேற்கத்திய எழுத்தாளன் கூட இதைப் பதிவு செய்யவில்லை.
    எப்படி ஸீரோ டிகிரி போன்ற ஒரு நாவல் உலக மொழிகளில் எழுதப்படவில்லையோ, அதேபோல் புருஷன் போன்ற ஒரு நாவலும் உலகின் எந்த மொழியிலும் எழுதப்படவில்லை.

    நோபல் பரிசு பெற்ற Elfriede Gelinek எல்லாம் அராத்துவிடம் பிச்சை வாங்க வேண்டும். என்னுடைய வாசிப்பு அனுபவத்தில் உலகின் எந்த மொழியிலும் இப்படி ஒரு நாவலைப் படித்ததே இல்லை. ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால், யாருமே படிக்காத இலக்கியவாதிகளையெல்லாம் நான் படித்திருக்கிறேன்.

    – சாரு நிவேதிதா

  • (0 reviews)

    கர்நாடக முரசும்...

    150.00

    நான்–லீனியர் என்ற இந்த எழுத்துப் பாணி வாசிப்பதற்கு எளிதாகத் தோன்றினாலும் இதை இலக்கியப் பிரதியாக மாற்றுவது கிட்டத்தட்ட அசாத்தியமான ஒன்று. ஏனென்றால், இக்கதைகளுக்கான கச்சாப் பொருளை நான் குப்பையிலிருந்து எடுக்கிறேன். ரொலாந் பார்த் (Roland Barthes) இதை Literature of Trash என்று குறிப்பிடுகிறார். ஏற்கனவே தமிழ்ச் சமூக வெளியில் ஏராளமான குப்பை மலிந்து கிடக்கிறது. இங்கே சினிமாவுக்கு எழுதுபவரும் ஜனரஞ்சகப் பொழுதுபோக்குக் குப்பைகளை உற்பத்தி செய்பவர்களும்தான் எழுத்தாளராகக் கருதப்படுகிறார்கள். அப்படிப்பட்ட குப்பைக் கிடங்கிலிருந்து குப்பையைப் பொறுக்கி அதை எப்படி கலையாக மாற்றுவது? அந்த மாயாஜாலத்தைத்தான் என்னுடைய நான்–லீனியர் கதைகள் செய்தன.

  • (0 reviews)

    சாரு நிவேதிதாவால்...

    50.00

    ஒட்டுமொத்த இந்திய சமூக மனநிலைக்கு எதிராக வாழ்ந்தும் எழுதியும் வரும்
    சாரு நிவேதிதாவிற்கு இந்த சமூகத்தில் இருந்து நிராகரிப்பையும் தடையையையும்
    தவிர வேறென்ன கிடைக்கும்? இந்நூல் முழுவதும் பொது சமூகமும், அறிவுலகும் எப்படி
    ஒரு கலைஞனை தீண்டாமைக்குள்ளாக்குகிறது என்பதை விளக்குகிறது.

  • Hot
    (0 reviews)

    புஸ்ஸி –...

    200.00

    சாரு நிவேதிதா சொல்வது போல எதார்த்தவாத கதைகளின்‌ காலம் முடிந்துவிட்டதென்று சொல்கிற‌ எழுத்தாளர்களில் அராத்துவும் ஒருவர். தனது எழுத்தில்‌ உருவாகும் எல்லா கதைகளிலும் ஒரு புது பாணியை கையாள்கிறார். இந்த தொகுதியில் வரும் இரண்டு கதைகளும் அதற்கு விதிவிலக்கல்ல. கதை மட்டுமன்றி நூல் வடிவமைப்பும் அவ்வாறே இருக்கிறது. நூலின் முன் அட்டை பின் அட்டை என்கிற விஷயமே கிடையாது. ஒரு அட்டையில் புஸ்ஸி இன்னொரு அட்டையில் Fool vs Intellectual. ஒரு அட்டை பக்கத்தில் ஒரு கதை ஆரம்பிக்க இன்னொரு அட்டை பக்கத்தில் இன்னொரு கதை ஆரம்பிக்கிறது.

  • Limited
    (0 reviews)

    நிறமேறும் வண்ணங்கள்...

    200.00

    அதிர்ச்சி மதிப்புகளுக்காக எழுதுகிற போக்கு இன்றையச் சில எழுத்தாளர்கள்
    நடுேவ வந்திருக்கிறது. அப்போக்கு அராத்து கதைகளில் அறேவ இல்லை.
    நகைச்சுவைக்காக வீம்புக்கு முயல்கிறாராஎன்றால் அப்படியும் இல்லை. நடைமுறை
    வாழ்க்கையில் அவர் கவனித்தவை, சிறுகைதகளில், இருண்ட நகைச்சுவைத்
    தருணங்களாக வெளிப்படுகின்றன. எனக்குப் பிடித்தது, அராத்துவின் அலுப்புத்தராத எழுத்துநடை.
    -கவிஞர் ராஜ சுந்தரராஜன்

  • Hot
    (0 reviews)

    உண்மையான காதல்...

    100.00

    “உண்மையான காதல்” என்பது ரேமண்ட் கார்வரின் பிரபலமான குறுநாவலான What We Talk About When We Talk About Love என்றக் கதையின் மூலம் உருவான புதிய  நாவல். இது காதல் என்ற பரிமாணத்தை நாம் எவ்வாறு புரிந்துகொள்கிறோமோ, அதன் உண்மையான தன்மை எதுவாக இருக்கக்கூடும் என்பதை பற்றிய ஆழமான ஆய்வு. இந்தப் புத்தகத்தில், கார்வரின் கதையின் மூலக்கதையை எடுத்து, நவீன உலகில் நடந்துகொள்ளும் உறவுகள், அந்த உறவுகளின் மாறுதல்கள் மற்றும் அவற்றின் உண்மை நிலை என்ன என்பதை பற்றி பேசப்படுகிறது.

    இன்றைய காதல் மற்றும் உறவுகளுக்குள் காமம், திருமணம், லிவ் இன், சைக்கோத்தனம், அழிவது, மீண்டும் உருவாகுவது, மனநிலை மாற்றம் என அனைத்து இடங்களிலும் உறவுகளின் உள்ளார்ந்த மாற்றங்களை காட்டி, எழுதப்பட்ட இந்த குறுநாவல் நம் சமூகத்தில் காதலின் வழியிலும், அதன் உண்மையைப் பற்றிய நம்பிக்கைகளையும் குழப்பங்களை கொண்டுள்ள ஒவ்வொரு நபருக்கும் திகிலாகவும், சிந்திக்க வைக்கும்படி இருக்கும்.

    இதன் உள்ளடக்கம், காதல் மற்றும் அதன் உண்மையிலான அர்த்தங்களை கொஞ்சம் கசப்பான முறையில் பரிசீலிக்கிறது. உள் உணர்வுகளும் வெளிப்புற அனுபவங்களும் சிக்கலான முறையில் ஒன்றோடொன்று இழைந்துகொண்டு, ரஜினி மற்றும் சுசீலாவின் உள்ளார்ந்த மனநிலைகள் எவ்வாறு அந்த உறவின் தன்மையை மாற்றுகின்றன என்பதையும், அவர்கள் பெற்றுள்ள மனச்சிக்கல்களையும் எளிய மற்றும் புரிதல் வகையிலும் படைக்கும் வகையில் தொகுத்துக் காட்டுகிறது.

    “எனக்கு என் மீதும், சுசீலா மீதுமே சந்தேகம் வந்து விட்டது,” என்ற கதாநாயகனின் எண்ணங்கள் இந்த புத்தகத்தின் உண்மையான மையத்தை உணர்த்துகின்றன. இது ஒரு அத்தியாயமான கருத்தாடல் மட்டுமின்றி, காதல் மற்றும் அதன் விளைவுகளுக்கு நாம் அளிக்கும் பொருள் அடிப்படையில் எவ்வாறு நம்மை பாதிப்பதாகும் என்பதை நிறைவேற்றுகிறது.

    இந்த குறுநாவலின் முக்கிய குறிக்கோள், காதல் என்பது ஓர் மிகப் பெரிய புரிதலை, நம்பிக்கையையும், பலவகையான உணர்வுகளையும் கொண்டிருக்கும் ஒரு சிக்கலான உண்மை என்று நம்மை நம்ப வைக்கின்றது. உங்களை இந்த சிக்கலான, புரியாத காதலின் பாதையில் ஒரு பயணத்திற்கு அழைக்கிறது!

  • Hot
    (0 reviews)

    வேணுவனம் –...

    200.00

    தான் என்றும் ஒசத்தி என்றும் சறுக்கி விழுந்து விட்ட” மானுடரின் மத அமைப்புடன்
    தன்னைப் பொருத்தவும் அவரது மனம் இடம்கொடுக்கவில்லை; இன்னொரு பக்கம் துல்லிய
    எடைத்தராசாக மாறி இப்பிரபஞ்சத்தை அளவிடும் மார்க்ஸியம் போன்ற பொருளியல்,
    இவ்வுலக தத்துவத்தையும் அவரால் ஏற்க முடியவில்லை. அதற்காகவே அவர் கற்பனாவாத
    மரபுக்குப் போகிறார் என நினைக்கிறேன். அவரது கவிதைகளின் பிரதான உருவகங்களான
    பறவை, வானம் ஆகியவற்றை நாம் பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆங்கில கற்பனாவாத
    கவிதைகளில் (ஷெல்லி, கீட்ஸ்) அடையாளம் காணலாம். குறிப்பாக ஷெல்லியின்
    கவிதைகளுக்கும் தேவதேவனுக்கும் விரல் தொடும் தொலைவு உள்ளது. அதே போலத்தான்
    எமர்சனின் கட்டுரைகள். தேவதேவன் இந்த மேற்கு-கிழக்கு இணைப்பின் வழியே பக்திக்
    கவிதை மரபின் மதசார்பில் இருந்து, கூட்டில் இருந்து பறந்து தனதான ஆகாயத்தைத்
    தொடுகிறார். இதைப் பற்றி கவிதை விமர்சனத்தில் நாம் போதுமானபடிக்கு பேசவில்லை
    என நினைக்கிறேன்.
    -ஆர். அபிலாஷ்

  • Limited
    (0 reviews)

    HoneyTrap

    150.00

    This book beautifully summarises the men-women relationship conflict both rationally and satirically
    from a man’s perspective.

    Araathu writes daringly about the crazy atrocities women do in the name of ‘love’ and how stupid these are in the eyes of men
    in a very real, genuine and fair manner that readers can totally relate to it.

    A brave endeavor. The book will leave you laughing, unlearing and of course, having fun.

  • (0 reviews)

    விண்மாடம் –...

    200.00

    கவிதையின் மூலம் வாசகனை ஆன்மிக எழுச்சிக்கு முன் நகர்த்தும் பணியை அரூபமாய் செய்கிறார்

    தேடல் உள்ள வாசகன் தேவதேவன் வரிகளின் மூலம் மிக சுலபமாக அப் பேருண்மையை பேரமைதியை கண்டடைவான். என்பதே நான் கண்ட வாசிப்பின் தரிசனம்.
    -அமிர்தம் சூர்யா

  • HotLimited
    (0 reviews)

    காண்பதும் காணாததும்...

    200.00

    புல் மரம் வீடு என பராக்கு பார்க்கும் மனிதர் அல்ல.  இயற்கையின் விசித்திரங்களுக்குள் பயணித்து ஆழமான புரிதல் மூலம் பெற்ற அனுபவச் சரிவை கவிதை ஆக்குவது அவரது வழமையாகும். தேவதேவன் ஒரு தமிழ்க் கவிஞர் என்ற வகையில் , தன் முதுகில் பண்பாட்டின் பாரத்தைச் சுமந்தபடி , கவிதை அனுபவம் எனும் மலையின் சிகரம் நோக்கி களைப்படையாமல் ஏறிக் கொண்டிருக்கிறார். நாம் பூமியில் நின்றபடி அவர் ஏறிய உயரங்களை அன்னாந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

  • Hot
    (0 reviews)

    மெது விஷமும்...

    200.00

    “புதியனவற்றைப் புதிய மொழியில் பேச வேண்டியது கவிஞனுக்கு அவசியம்.”
    -மாயாகோவ்ஸ்கி

    இயற்கையோடு இயைந்த நிலையில் தன்னை இயற்கையாக அவதானித்து, இயற்கைப்
    பெருவெளியில் ஆனந்தம் தேடுகிற மனதுடன் தேவதேவன் தத்தளிக்கின்றார். அவருடைய
    மொழியானது கவிதையைத் தவமாகக் கருதி, வெளியில் தன்னிருப்பைக் கண்டறிய முயலுகின்றது.
    -ந.முருகேசபாண்டியன்

  • Limited
    (0 reviews)

    நடைமண்டலம் –...

    200.00

    பாரதியிடம் இருந்த ஆர்ப்பரிக்கும் ,உரத்த குரலில் இருந்து ஒரு கனிந்த சொல்லமைதி மிக்க இடத்திற்கு நவீன கவிதையை எழுதிப் பார்த்தவர் தேவதேவன் எனத் தோன்றுகிறது.  அதே சமயம் காணும் இடத்தில் எல்லாம் உன் காட்சி தோன்றுதடா நந்தலாலா என்ற பார்வைக்கு நெருக்கமாக தன்னையும் தன் சுயத்தையும் இயற்கையின் ஓர் அங்கமாக பார்ப்பது தேவதேவனின் கவிதைகளின் பிரதான குணாம்சமாக இருக்கிறது. கோட்பாடுகளுக்கும் வடிவ மரபுகளுக்கும் வெளியே படைப்பு உந்தத்தால் மட்டும் தொடர்ந்து எழுதும் தேவதேவனின் படைப்பூக்கம் எந்த செயற்கை நுண்ணறிவாலும் ஈடு செய்ய இயலாதது. மானுடம் மீதான அக்கறை இவரது கவிதைகளின் ஆதார ஒளியாய் இருக்கிறது.நடைமண்டலம் என்ற இந்த தொகுப்பு எங்கும் அதற்கான சாட்சியங்களை காணலாம். தமிழ் கவிதையின் மாபெரும் பரிணாமத்தில் தேவதேவனின் பங்கு பிரத்தியேகமானது.

  • 20% OffHotLimited
    (0 reviews)

    மந்தஹாசினி –...

    Original price was: ₹150.00.Current price is: ₹120.00.

    மந்தஹாசினி ,ஸிரிஷா,ஹோனிகா – மூன்று நடனமாடும் பெண்கள் பற்றிய ஒரு சிறுநாவல். தரம்…

    ஆரம்பத்தில் ஹாசினி எனும் பெண்ணை பற்றிய கதை எழுதி முடித்த பின்னர் இதை எழுதியது நானா என்று அவரை அவரே கிள்ளி பார்த்திருப்பார். ஒரு கிளாசிக்கல் கதை சொல்லல் முறை. அதில் தன்னுடைய நக்கல் நய்யாண்டி என்று விளையாடி இருக்கிறார்.

    வழக்கமாக வரும் பாலியல் பெண்கள் கதைகள், நடிகைகளின் கதைகள் போல இரண்டாம் பெண்ணின் கதை ஆரம்பத்தில் இருந்தது. ஆனால் அந்த கதையை முடித்த விதம் அருமை.

    மூன்றாவது பெண்ணின் கதை விரல் விட்டு எண்ணும் எண்ணிக்கை உள்ள பெண்களின் கதை. மூன்று கதைகளும் பேசும் பெண்ணியம் தொடர்பான விசயங்கள் சிறப்பு.